பதிவேட்டு அலுவலகம்
நீதிவான் நீதிமன்றத்தின் செயல்பாடுகளை பதிவேட்டு அலுவலகம் மேற்பார்வை செய்கிறது. இது நீதிமன்றத்தில் எங்காவது அமைந்திருக்கும், பெரும்பாலும் காத்திருப்பதற்கான முன்கூடத்திற்கு அருகில் அமைந்திருக்கும். உங்களால் பதிவேட்டு அலுவலகத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அது எங்கே என்று நீதிமன்றத்தில் பணிபுரியும் ஒருவரிடம் கேட்கலாம்.
நீதிமன்றச் செயல்முறையின் பெரும்பாலான அம்சங்களைப் புரிந்துகொண்டு நீதிமன்றத்திற்கு வருபவர்களுக்குப் பதிவேட்டு அலுவலக ஊழியர்கள் உதவ முடியும். நீதிமன்றம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய கூடுதல் தகவலை அவர்கள் உங்களுக்கு வழங்கலாம், உங்கள் வழக்கு எங்கு விசாரிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிய உதவலாம் மற்றும் ஆதரவு சேவைகளை அணுக உதவலாம். பிணை தொடர்பான ஆவணங்கள் போன்ற பெரும்பாலான நீதிமன்ற ஆவணங்கள் கையொப்பமிடப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டிய (அல்லது தாக்கல் செய்ய வேண்டிய) இடமாகவும் பதிவேட்டு அலுவலகம் உள்ளது.
பதிவேட்டு அலுவலகத்தில் உங்களுக்கு எந்தச் சட்ட ஆலோசனையும் வழங்க முடியாது அல்லது உங்கள் நீதிமன்ற வழக்கில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல முடியாது.