நீதிமன்ற மரபு ஒழுங்கு
நீதிமன்றம் ஒரு முறைசார்ந்த மற்றும் முக்கியமான இடம். நீதிமன்றத்திற்கும் நீதி அமைப்புக்கும் மரியாதை அளிக்கும் வகையில் மக்கள் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிவான்
நீதிவான் நீதிமன்ற அறைக்குள் நுழையும்போதோ அல்லது வெளியேறும்போதோ, நீங்கள் நின்று தலை வணங்க வேண்டும். நீங்கள் நீதிமன்ற அறைக்குள் நுழையும்போதோ அல்லது வெளியேறும்போதோ, குயின்ஸ்லாந்தின் மரபுரிமைச் சின்னத்தை வணங்க வேண்டும். நீங்கள் நீதிவானை “யுவர் ஆனர்” என்று அழைக்க வேண்டும் மற்றும் நீதிவான் உங்களிடம் பேசும் போதெல்லாம் நிற்க வேண்டும்.
வழக்கு மன்றக் கூட்ட அறை நடத்தை சார்ந்த விதிமுறை
நீதிமன்ற வளாகத்தில் இருப்பவர்கள் அமைதியாகவும் மரியாதையுடனும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிவான் உங்களை அழைக்காதவரை நீங்கள் பேசக்கூடாது. நீங்கள் சாப்பிடவோ, புகைபிடிக்கவோ, மெல்லவோ கூடாது.
நீங்கள் நீதிமன்ற அறையில் இருக்கும்போது, உங்கள் தொலைபேசி பயன்பாட்டில் இல்லாமல் அல்லது அமைதியான நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் படங்களை எடுக்கவோ அல்லது நடவடிக்கைகளை பதிவு செய்யவோ கூடாது.