Skip to main content

ஆதரவு சேவைகள்

சட்ட உதவி மற்றும் மொழிபெயர்துரைப்பாளர்களுக்கு கூடுதலாக, நீங்கள் பிற ஆதரவு சேவைகளின் உதவியையும் பெறலாம். இது உங்கள் நீதிமன்ற வழக்கின் தன்மை மற்றும் உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைகளைப் பொறுத்தது.

நீதிமன்ற நடைமுறைகளைக் கையாள்வதில் உங்களுக்கு உதவக்கூடிய பல சேவைகளை நீதிமன்றம் வழங்குகிறது. இந்த சேவைகளின் பட்டியலை https://www.courts.qld.gov.au/services இல் காணலாம்.

பல்வேறு வகையான அரசு மற்றும் சமூக ஆதரவு சேவைகளும் உள்ளன. இவற்றில் பல சேவைகள் இலவசம்.

நீங்கள் வீட்டு வன்முறை உறவில் ஈடுபட்டிருந்தால், நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான உதவியைப் பெறுதல், நெருக்கடியான இடங்களுக்கு உங்களைக் குறிப்பிடுதல் மற்றும் நிதி உதவியைப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு ஆதரவு சேவைகள் உள்ளன. வன்முறை நடத்தையை நிறுத்த உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் ஆதரவும் உள்ளது. ஆதரவு சேவைகளின் முழு பட்டியலையும் https://www.courts.qld.gov.au/going-to-court/domestic-violence/support-services# இல் காணலாம்