வழக்கறிஞர்கள்
உங்களிடம் ஒரு வழக்கறிஞர் இருந்தால், அவர்கள் உங்களுக்காக நீதிமன்றத்தில் பேசுவார்கள். உங்களிடம் வக்கீல் இல்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞரை வைத்திருக்க விரும்பினால், அதைப் பற்றி நீங்கள் மாஜிஸ்திரேட்டிடம் சொல்ல வேண்டும். வழக்கமாக, குற்றவியல் மற்றும் வீட்டு வன்முறை விஷயங்களுக்காக, நீதிமன்ற அறைகளுக்கு வெளியே ‘டியூட்டி வக்கீல்’ என்று அழைக்கப்படும் ஒருவர், Legal Aid Queensland என்ற அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவார். நீங்கள் அவர்களை அணுகலாம், சில சமயங்களில், உங்கள் வழக்கு என்ன என்பதைப் பொறுத்து அந்த நாளில் அவர்கள் உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். இல்லையெனில், நீதிமன்றத்தில் அன்று என்ன நடக்கும் என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் உங்களுக்கு உதவலாம்.
இருப்பினும், உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், நீதிமன்றத்தில் உங்களுக்காகப் பேசவும் உங்களுக்கு உரிமை உண்டு. நீங்கள் அதை செய்ய விரும்பினால், நீங்கள் அதை மாஜிஸ்திரேட்டிடம் சொல்ல வேண்டும். ஒரு கட்டத்தில் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டால், வழக்கின் எந்த நிலையிலும் நீங்கள் வழக்கறிஞரைப் பயன்படுத்தலாம்.