நீதிமன்றப் பாதுகாப்பு
சில நீதிமன்றங்களில் பாதுகாப்புப் பரிசோதனை இருக்கும். நீதிமன்றத்தில் பாதுகாப்பு பரிசோதனை இருந்தால் வரும் ஒவ்வொருவரும் அதனைக் கடந்து செல்ல வேண்டும்.
நீதிமன்ற கட்டிடத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்புக்காக இது செய்யப்படுகிறது. பைகள் போன்ற உங்களின் சில உடமைகளை இயந்திரத்தின் உள்ளே வைக்க வேண்டும் என்று அர்த்தம்.
நீங்கள் உலோகத்தைக் கண்டறியும் பொறியமைப்பு வழியாகவும் நடக்க வேண்டும்.
சில நேரங்களில், ஒரு பாதுகாப்புக் காவலர் வைத்திருக்கும் கைக் கருவி மூலம் நீங்கள் பரிசோதனை செய்யப்பட வேண்டியிருக்கலாம்.
உங்களிடம் நீதிமன்றக் கட்டிடத்தில் அனுமதிக்கப்படாத ஒன்றை அவர்கள் கண்டறிந்தால், பொருளைப் பொறுத்து அவர்கள் அதை உங்களிடமிருந்து பறிமுதல் செய்யலாம்.