ஒரு சாட்சியாக நீதிமன்றத்திற்கு வருதல்
நீங்கள் நீதிவான் நீதிமன்றத்தில் சாட்சியாக இருந்தால், நீதிமன்றத்திற்கு வருமாறு உங்களைக் கேட்ட நபருக்கு நீங்கள் நீதிமன்றத்திற்கு வந்தவுடன் அல்லது பதிவேட்டு அளுவலகத்திடம் தெரிவிக்க வேண்டும். உங்கள் முறை சாட்சியமளிக்கும் வரை நீதிமன்ற அறைக்குள் நுழைய முடியாது. உங்களைச் சந்திக்க நீதிமன்றத்திற்கு வரச் சொன்ன நபருக்காக நீங்கள் காத்திருக்க வேண்டும், நீங்கள் காத்திருக்கக்கூடிய ஒரு பகுதிக்கு அவர்கள் உங்களை அழைத்துச் செல்வார்கள்.
காத்திருக்கும் மற்ற சாட்சிகளுடன் வழக்கைப் பற்றி விவாதிக்க உங்களுக்கு அனுமதி இல்லை.
உங்கள் முறை வரும்போது, ஒரு வழக்கறிஞர் அல்லது நீதிமன்ற சேவை அதிகாரி என்று அழைக்கப்படும் நபர் சாட்சியமளிக்க உங்களை அழைப்பார். அவர்கள் உங்களை சாட்சி பெட்டிக்கு அழைத்துச் செல்வார்கள், இது நீதிமன்ற அறையில் சாட்சிகள் அமரும் இடமாகும். நீங்கள் ஒரு சத்தியம் அல்லது உறுதிமொழி எடுக்கும்படி கேட்கப்படுவீர்கள், இது நீதிமன்ற அறையில் நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.
ஆதாரம் கொடுக்கும்போது உண்மையைச் சொல்ல வேண்டும். நீதிமன்றத்தில் உண்மையைச் சொல்லாமல் இருப்பது குற்றமாகலாம்.