Skip to main content

பாதுகாப்பு பரிசோதனை செய்யப்பட்ட பிறகு.

உங்கள் வழக்கு எங்கு விசாரிக்கப்படும் என்பதைக் கண்டறிதல்:

சில நீதிமன்றங்களில் இந்த நாளில் விசாரிக்கப்படும் ஒவ்வொரு வழக்கயும் காட்டும் அறிவிப்புப் பலகை இருக்கலாம். நீங்கள் உங்களுக்காக இங்கே இருந்தால், உங்கள் பெயரைத் தேடுங்கள். உங்கள் நிறுவனத்திற்காக நீங்கள் இங்கு இருந்தால், உங்கள் நிறுவனத்தின் பெயரைத் தேடுங்கள். பட்டியல் பொதுவாக உங்கள் குடும்பப்பெயர் அல்லது உங்கள் முக்கிய குடும்பப் பெயர் அல்லது நிறுவனத்தின் பெயருக்கு ஏற்ப அகரவரிசையில் இருக்கும். உங்கள் பெயருக்கு அடுத்து, நீங்கள் செல்ல வேண்டிய நீதிமன்ற அறையின் எண்ணைக் காண்பீர்கள். நீங்கள் சரியான நேரத்தில் இருப்பது முக்கியம்

அறிவிப்புப் பலகை இல்லாவிட்டால் அல்லது உங்கள் பெயரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்கள் நீதிமன்ற வழக்கு எங்கு விசாரிக்கப்படுகிறது என்பதை உங்களுக்குச் சொல்ல ஒரு ஊழியரிடம் கேளுங்கள்.

உங்கள் வழக்கு விசாரணைக்கு முன் என்ன செய்ய வேண்டும்

உங்கள் வழக்கு எங்கு விசாரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் கண்டறிந்ததும், நீதிமன்ற அறைக்கு வெளியே அல்லது அதற்குள் காத்திருக்கலாம். குற்றவியல் மற்றும் உரிமையியல் என ஒவ்வொரு நாளும் பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. உங்கள் வழக்கு விசாரணைக்கு முன் நீங்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

சில நீதிமன்றங்கள் பெருமளவு வேலை செய்யவேண்டியிருக்கிறது, மேலும் நீங்கள் நீதிமன்றத்திலோ அல்லது நீதிமன்ற வளாகத்திதிலோ இருக்கும்போது உங்கள் பெயரையோ அல்லது உங்கள் நிறுவனத்தின் பெயரையோ கேட்பது முக்கியம். நீதிமன்றத்தில் பொது ஒலிபரப்பி அமைப்பு பயன்படுத்தப்படலாம். நீங்கள் நீதிமன்ற அறைக்கு வெளியே காத்திருந்தால், செவிப்பொறியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், அதனால் உங்கள் பெயர் அழைக்கப்படுவதை நீங்கள் கேட்கலாம்.

உங்கள் வழக்கில்  என்ன சொல்லப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள உங்களுக்கு ஒரு மொழிபெயர்த்துரைப்பாளர் தேவை என்று நீங்கள் நினைத்தால், கூடுதல் தகவல்கள் இங்கே உள்ளன.

உங்கள் வழக்கில் உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் உங்களிடம் இல்லையெனும்போது, உங்களுக்கு ஒருவர் வேண்டும் என நீங்கள் விரும்பினால், கூடுதல் தகவல்கள் இங்கே உள்ளன.